பதின்மூன்று வயது சிறுமியுடன் 22 வயது இளைஞன் - தங்குவதற்கு இடம் கொடுத்தவர் விளக்கமறியலில்


                                        அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் குறைந்த வயதுடைய இருவருக்கு வீட்டில் தங்குவதற்கு அரைகள் ஒதுக்கிக் கொடுத்த நபர் ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் வெள்ளிக்கிழமை(16) உத்தரவிட்டார்.


தோப்பூர்- பாட்டாளிபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் தனது வீட்டில் பதின்மூன்று வயதுடைய சிறுமிக்கும் மற்றும் 22 வயதுடைய இளைஞருக்கும் தங்குவதற்கு வீட்டில் இடம் கொடுத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை (15)கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


குறித்த சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.