நிந்தவூரில் சுமார் 13ஆயிரம் பேர் பங்கேற்ற விசேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு.


-இந்திய இஸ்லாமிய அறிஞர் மௌலவி அப்துல் பாஸித் புஹாரி பிரதம அதிதி-
               (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
ராபிதது அஹ்லிஸ் ஸூன்னா அமைப்பினரின் ஏற்பாட்டிலான விசேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு இன்று இரவு நிந்தவூர் ஹசன் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

ராபிதது அஹ்லிஸ் ஸூன்னா அமைப்பின் தலைவர் அஷ்ஷேஷ் வைத்திய கலாநிதி எஸ்.எம்.றைசுதீன் ஸராயி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சர்வதேச இஸ்லாமிய மார்க்க அழைப்பாளரும், தென்னிந்திய பிரபல மார்க்க அறிஞருமான மௌலவி அப்துல் பாஸித் புஹாரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பிரதான உரை நிகழ்த்தினார்.

மேலும் இம்மாநாட்டில் சங்கைக்குரிய உலமாக்களான அஸ்சேஷ்.என்.பீ.எம்.அபூபக்கர் சித்தீக் மதனி, அஸ்சேஷ். எம்.எல். முபாறக் மதனி, அஸ்சேஷ்.இஸ்மாயீல் ஸலாபி உள்ளிட்ட உள்ளுர், வெளியூர் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டு, விசேட மார்க்கச் சொற்பொழிவாற்றினர்.

மாலை 4.30 மணிக்கு ஆரம்பமான இம்மாநாடு இரவு 11 மணியளவில் நிறைவு பெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் பொது மக்கள் கலந்து கொண்டு, சிறப்பித்தமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இங்கு இந்திய இஸ்லாமிய அறிஞர் மௌலவி அப்துல் பாஸித் புஹாரி கருத்துத் தெரிவிக்கையில்:-    'நாளை மறுமை நாளில் மறணித்த மனிதர்கள் யாவரும் உயிருடன் எழுப்பப்பட்டு, மஃஷர் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வேளையில், கடுமையான சூரிய வெப்பமும், நரகத்தின் நெருப்பும் கடுமையாக இருக்கும் வேளையில் அல்லாஹ் 07 கூட்டத்தாருக்கு மட்டும் தனது அறிசின் நிழலைக் கொடுத்து, அவர்களைக் காப்பாற்றுவான். அதில் முதலாவது கூட்டத்தினராக அல்லாஹ்வைப் பயந்து அழுத கூட்டத்தினர்  என்று நபிகள் நாயகம் சொலிலியிருக்கிறார்கள். இது போலவே நபிகள் நாயகம் அவர்களும் இந்த சமூகத்தினரின் நன்மைக்காக, இவர்களின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக அழுதிருக்கிறார்கள்' எனத் தெரிவித்தார்.

ராபிதது அஹ்லிஸ் ஸூன்னா அமைப்பின் பிரதித் தலைவர் அஸ்சேஷ். எம்.எல். முபாறக் மதனி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'இன்று நமது சமூகம் சந்திக்கின்ற ஒரு பெரிய பித்னா( பிரச்சினை) இஸ்லாமியக் கோட்பாட்டோடு- கொள்கையோடு சம்பந்தப்பட்ட பித்னாவாகக் காணப்படுகிறது. அன்று நபி அவர்கள் சொன்னார்கள் ஈராக்கிலிருந்துதான் பித்னாக்கள் உருவாகும் என்று.  அதுபோன்று, இன்று அங்கிருந்து தான் ஸியாக்கள், முஃதஸிலாக்கள், கவாரிஸிகள் போன்ற பித்னாக்காரர்கள் உருவாகிக் கொண்டிருககின்றனர். இவர்களில் ஸியாக்கள் மிகமோசமான கொள்கையுடையவர்கள். இவர்கள் தமது கொள்கைகளை நமது நாட்டிலும் பரப்புவதற்கு கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இது நாம் எதிர்நோக்குகின்ற பெரும் பித்னாவாகும். இது போல் பல பித்னாக்கள் இந்த ஸியாக்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவைகளிலிருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டும்'  எனத் தெரிவித்தார்.









Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.