ஜெமீல் அகமட்
முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது தான் முஸ்லிம் காங்கிரஸ் அதன் ஸ்தாபக தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் நாட்டில் எந்த திசையிலாவது முஸ்லிம்களுக்கு இனவாத பிரச்சினை என்றால் அதே நிமிடம் ஆட்சி கலையும் நிலையை உருவாக்கி அரசியல் செய்தார் அதனால் ஆட்சி செய்த அரசியல் தலைவர்கள் அஸ்ரப் அவர்களின் ஆலோசனைப்படி அரசாங்கத்தை வழி நடத்தி செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்குள் ஆளாகினார்கள் அதனால் அஸ்ரப் அவர்களின் அரசியல் காலங்களில் நாட்டில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட வில்லை முஸ்லிம்கள் மற்ற இன மக்களால் மதிக்கப்பட்டனர் நிம்மதியாக வாழ்ந்தனர் அந்த நாளை இன்றும் மக்கள் மறக்காமல் அஸ்ரப் அவர்களுக்கு துஆ செய்கின்ற நிலையில்
அஸ்ரப் அவர்கள் மறைவுக்கு பின் நப்சி பதவி கேட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பதவியை கபடத்தனமாக பெற்றுக் கொண்ட சிதேவி றவூப் ஹக்கீம் அவர்கள் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு அஸ்ரப் அவர்களின் அரசியல் பாதையை மூடி மறைத்ததால் அரசாங்கத்துக்கும் இனவாதிகளுக்கும் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆகிவிட்டது இன்று முஸ்லிம்களுக்கு இனவாதிகளால் பெரும் தொல்லை ஏற்படுவதற்கு காரணம் யார் என்று பார்த்தால் றவூப் ஹக்கீமுடைய அரசியல் என்று தான் கூற வேண்டும் கடந்த கால அரசியலை சிந்தித்தால் இதன் உண்மைகள் புலனாகும்
அத்தோடு இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாதிகளின் செயலை தடுத்து நிறுத்தக் கூடிய அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல வருடத்துக்கு முதல் சமுதாயத்தின் நலனை சிந்தித்து ஹக்கீமுக்கு ஆலோசனை செய்தவர்கள் தான் அதாவுல்லாஹ் றிசாத் அமீர் அலி இன்னும் பலர் ஆனால் இவர்களின் கருத்தை தனது சுயநல அரசியலுக்காக ஹக்கீம் ஏற்றுக் கொள்ளாதபடியால் சமுதாய அழிவுக்கு காரணமாக இருக்கும் ஹக்கீம் தலைமை தாங்கும் இந்த முஸ்லிம் காங்கிரஸில் இருக்க கூடாது என்று பிரிந்தவர்கள் தான் இவர்கள் . இன்று தனிக்கட்சி ஆரம்பித்து மக்களுக்கு மறக்க முடியாத சேவை செய்து வருகின்றனர் ஆனால் சமுதாய கட்சி சானக்கிய மனிதன் தலைவராக இருக்கும் கட்சியால் மக்களுக்கு குறிப்பிடத்தக்க எந்த சேவையும் இல்லை என கட்சியை வளர்த்த மக்கள் கவலை அடைகின்றனர்
அதிலும் ஒன்று பெரும்பாலான மக்கள் வாழும் இடத்தில் வசிக்கும் தலைவன் சிறுபான்மை மக்களை பற்றி பேசும் போது தனக்கு பெரும்பாலான மக்களால் ஏதாவது அச்சுருத்தல் வரலாம் என்ற அச்சமும் ஹக்கீமுக்கு மனதுக்குள் இருக்கலாம் அப்படி அவர் நினைப்பதில் குற்றம் இல்லை இந்த நிலையில் உள்ளவர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்க முடியாது அவர் தனது பதவியை இராஜினா செய்து பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் பகுதியிலிருந்து தலைவர் தெரிவு நியமிக்கப்பட வேண்டும் அப்படி ஒரு தலைவரால் மட்டுமே பயப்பிடாமல் அஸ்ரப் அவர்களின் அரசியலை செய்து சமுதாயத்தை பாதுகாக்க முடியுமே தவிர இந்த ஹக்கீமால் என்றுமே முடியாது என்பதை மக்களும் தற்போது அறிந்துள்ளனர் ஆனால் நாடக்க முடியாத வயதிலும் நாடகம் ஆட வேண்டும் என்று நினைப்பவாகளும் உண்டு அது போல் மௌத்து வரை முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருக்க அஸ்ரப்பின் யாப்பில் திள்ளு முள்ளு காட்டும் ஹக்கீமை மாற்றுவது கடினமான காரியம் அதனால் முஸ்லிம்கள் வேறு தலைமைக்கு பின்னால் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ள
இன்று இனவாதிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாப்பது என்றால் சானக்கியத்தை விட்டு வீரத் தலைவனுக்கு பின்னால் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டும் அப்படி ஒரு தலைவன் நாட்டில் இருப்பது என்றால் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் பாசரையில் அரசியல் கற்ற கிழக்கின் சொந்தக்காரர் இன்று மக்கள் போற்றும் (சின்ன அஸ்ரப் ) தேசிய தலைவர் றிஷாட் மட்டுமே மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார் அவருக்கு இன்று கிழக்கு மாகான மக்கள் அஸ்ரப் அவர்களுக்கு கொடுத்த வரவேற்பு மரியாதை கொடுக்கின்றனர் அதிலும் அம்பாறை மாவட்டத்தில் அதிக மக்களின் ஆதரவு பெருகிவருகிறது தேசிய தலைவர் றிசாத் வருகையை அறிந்து தனது வேலைக்கு போகாமல் தலைவரை வரவேற்க விழி பார்த்து இருந்த மக்களும் அம்பாரை மாவட்டத்தில் இருக்கும் காலம் வந்து விட்டது அத்தோடு பல வருடம் தீர்க்கபடாத ஒலுவில் சாய்ந்தமருது பொத்துவில் ஊர்களின் பிரச்சினைகள் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களின் முயற்சியால் விரைவில் தீர்க்கபடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேசிய தலைவர் றிசாத் போட்டியிட வேண்டும் என அம்பறை மக்கள் விரும்புகின்றனர் சமுகத்துக்கு பிரச்சினை என்றால் உடனே குரல் கொடுக்கும் வல்லமை கொண்டவர்
எனவே சமுதாயத்துக்காகவும் மக்களுக்காகவும் அஸ்ரப் அவர்களின் பாதையில் அரசியல் செய்யும் தேசிய தலைவர் றிசாத் அவர்களால் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாக்க முடியும் என்பது நாடறிந்த உண்மை எனவே சகல முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களும் தேசிய தலைவர் றிசாத் அவர்களின் கரத்தை பலப்படுத்த முன் வர வேண்டும்






Post a Comment