நிந்தவூரில் விபத்து - ஒருவர் பலி



அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அல்லிமுல்லை வயல் பகுதியில் வாய்க்கால் ஒன்றில் இருந்து இன்று (02) ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நிந்தவூர் முதலாம் பிரிவை சேர்ந்த எல்.அஷ்ரப் (வயது- 42) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவருக்கு அருகில் இருந்து அவர் ஓட்டிச் சென்ற VBI-2070 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. 

மிகவும் வேகமாக பயணித்து நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதன் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.