கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த சம்மாந்துறை முஹம்மட் பிரோஸ்..!



( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
2016ம் ஆண்டிற்கான அரச புகைப்பட விருது வழங்கல் விழாவில் life style and cultural events பிரிவில் திறமைச் சான்றிதழ் பெற்று தன் ஊருக்கும் மாகாணத்திற்கும் பெருமை தேடித்தந்தார் சம்மாந்துறை புகைப்படக் கலைஞ்சர் முஹம்மட் பிரோஸ். இப் போட்டிப் பிரிவில் அதிகப்படியான விண்ணப்பங்கள் காணப்பட்டது மட்டுமன்றி இலங்கையின் தலைசிறந்த புகைப்பட கலைஞர்கள் பலரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. 


இப்போட்டியில் கிழக்கு மாகாணம் சார்பில் பெறப்பட்ட ஒரேயொரு விருது இதுவாகும். இது தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் வினவிய போது..


எல்லாப் புகழும் இறைவனுக்கே.... அல்ஹம்துலில்லாஹ். 2016ம் ஆண்டிற்கான அரச புகைப்பட விருது வழங்கல் விழாவில் life style and cultural events பிரிவில் திறமைச் சான்றிதழ் எனக்கு கிடைக்கப் பெற்றமை பெரு மகிழ்ச்சியே.... கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட ஒரேயொரு விருதாகும். இதற்காக எனக்கு பக்கபலமாக நின்ற என் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் இவ் விருது சமர்ப்பணம். என தனது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
இவரின் புகைப்படங்கள் சில பார்வைக்கு.. 











கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த சம்மாந்துறை முஹம்மட் பிரோஸ்..! | importmirror.com

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.