முஸ்­லிம்­க­ளுக்­கெ­­தி­ரான சதி நட­வ­டிக்­கை­களை முறி­ய­டிப்­ப­தற்கு முஸ்லிம் நாடுகள் ஒன்­றி­ணைய வேண்­டும்



முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக அடை­யாளம் காட்­டு­வ­தற்கு இன்று சர்­வ­தேச ரீதியில் முயற்­சி இடம்­பெ­று­கின்­றது. இந்த முயற்­சி­களை முறி­ய­டிப்­ப­தற்­காக அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்­றி­ணைய வேண்டும் என மீள் குடி­யேற்ற புனர்­வாழ்வு புன­ர­மைப்பு இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

சர்­வ­தேச ரீதி­யாக சிறு­பான்மை சமூகம் எதிர்­நோக்கும் பிரச்சினையும் அதனை எவ்­வாறு கையாள்வது என்ற தொனிப்­பொ­ருளில் நடை­பெற்ற இஸ்­லா­மிய மாநாட்டில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்­து­ரை­யாற்­றிய அவர் சர்­வ­தேச சமூகம் ஒற்­று­மைப்­பட்டு செயற்­ப­ட­வேண்டும்.

உல­மாக்­களும் தலை­வர்­களும் ஒன்­று­ப­டு­கின்ற போதே தங்­க­ளது தஃவா பணி­களை சிறப்­பாக செய்­ய ­மு­டியும்.

முஸ்­லிம்­க­ளையும் இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­நா­டு­க­ளையும் அழித்­தொ­ழித்து முஸ்­லிம்­க­ளுக்­கி­டையில் பல்­வேறு பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தினூ­டாக இஸ்­லாத்­தி­னு­டைய வளர்ச்­சியை தடுப்­ப­தற்கும் முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக அடை­யாளம் காட்­டு­வ­தற்கும் இன்று சர்­வ­தேச ரீதியில் முயற்­சிகள் இடம்­பெ­றுகின்­ற­ன.

இந்த முயற்­சி­களை முறி­ய­டிப்­ப­தற்­காக முழு சர்­வ­தேச முஸ்லிம் நாடுகள் ஒன்­றி­ணைய வேண்டும். உல­மாக்­களும், முஸ்­லிம் ­த­லை­வர்­களும், கல்­வி­மான்­களும் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வதன் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­திற்கும் எதி­ரான சதி­களை முறி­ய­டிக்க முடியும் என தெரி­வித்தார்.

இந்த மாநாட்டில் விசேட அதி­தி­யாக கலந்து கொண்ட இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ், இந்தோனே­சியா அர­சி­னாலும் இதனை ஏற்­பாடு செய்த அல்­ம­னா­ரத்துல் இஸ்­லா­மிய சர்­வே­தேச அமைப்பினாலும் பாராட்­டி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு இதில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுச்சின்னங்களை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்ததோடு மக்காவில் உள்ள இமாம்களால் இராஜாங்க அமைச்சர் விசேட போர்வை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.