கிரான்- கோமாரி விவசாயிகள் அமைப்பு ஆர்ப்பாட்ட பேரணி!

நல்லாட்சி அரசே
எமக்கு அரசினால் வழங்கப்பட்ட காணிகளை மீட்டுத்தா? எனக் கோரி
கிரான்- கோமாரி விவசாயிகள் அமைப்பு ஆர்ப்பாட்ட பேரணி!
-மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் பங்கேற்பு-
                ( .எல்..றபீக் பிர்தௌஸ் )
நல்லாட்சி அரசே எமக்கு 59 வருடங்களுக்கு முதல் அப்போதிருந்த அரசினால் வழங்கப்பட்ட காணியை மீட்டுத்தா? எனக் கோரி கிரான்- கோமாரி விவசாயிகள் அமைப்பு இன்று (26) நிந்தவூ|ர் பிரதேச செயலகததிற்கு முன்பாக 2ஆம் கட்ட ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடாத்தியுது.

கிரான்- கோமாரி விவசாயிகள் அமைப்பின் தலைவர் .அப்துல் ஜப்பார் தலைமையில் இடம் பெற்ற இவ்வார்ப்பாட்டப் பேரணியில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீனும் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

நிந்தவூர் பிரதேச கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டப் பேரணி பிரதான வீதிவழியே சென்று இறுதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது. 'விவசாயிகளின் தோழன் ஜனாதிபதி அவர்களே, இந்த ஏழை விவசாயிகளின் துயர் துடைக்கமாட்டீரொ?, ஏழைகளின் நீண்ட கால காணிபெறும் தடையை நீக்கு, நல்லாட்சி நாயகர்களே எமது காணிப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள், சென்ற அரசுக் காலத்தில் ஏமாற்றப்பட்ட நாம், இந்த நல்லாட்சியிலுமா...?, வன இலாகா அதிகாரிகளே எங்கள் விவசாயக் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்யாதே!, எங்கள் பிரதேச அரசியல்வாதிகளே ஏன் இந்த விடயத்தில் நீங்கள் மௌனிகளாக இருப்பது?, எங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியாதா?, நாங்கள் வாக்களித்த அரசியல்வாதிகளே..உங்களுக்கு அமைச்சுப் பதவி மட்டும் போதுமா?, ஏமாற்றாதே..ஏமாற்றாதே ஏழைவிவசாயிகளை ஏமாற்றாதே' போன்ற சுலோகங்களைத் தாங்கியிருந்த விவசாயிகள் கோசங்களை எழுப்பியவாறு பிரதேச செயலகத்திற்குள் நுளைந்து, விவசாயிகளின் பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்றைப்  பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீலிடம் ஒப்படைத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அவர் 'உடனடியாக மேன்நடவடிக்கையின் பொருட்டு செயற்படப் போவதாகத்' தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-' இந்தக் காணிகள் இந்த ஏழை விவசாயிகளுக்குச் சட்டப்படி சொந்தமானது. அதற்கான ஆதாரங்கள் அவர்களிடம் உள்ளது. அந்த நிலத்திலும் இந்த ஆதாரங்கள் தென்படுகின்றன

1957ம் ஆண்டு இந்தப் பிரதேசத்தின் ஏகபிரதிநிதியாக இருந்த முன்னாள் அமைச்சர் மர்ஹ ம் எம்.எம்.முஸ்தபா அவர்களினால் சட்டப்படி வழங்கப்பட்ட, யாராலும் மறுதலிக்க முடியாத ஆவனங்கள் இன்னும் இந்த விவசாயிகளிடம் உள்ளன.
 1983, 1984களில் பயங்கரவாதப் பிரச்சினைகளால் இப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இன்று சுமார் 30 வருடங்களாகுகின்றன. 30 வருடங்களிலும் இயற்கையாகவே காடுகள் உருவாகியிருக்கலாம். அதற்காக இவையாவும் காடுகளுக்குச் சொந்தம் என்று சொல்ல முடியாது
மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கூறுகிறார் இவர்களிடம் இருப்பது உண்மையான பத்திரங்கள். எனவே இவர்களுக்கு உடனடியாகக் காணிகள் வழங்க வெண்டும் என்று. ஆனால் நமது அதிகாரிகள் சிலர் அவர்களது அசமந்தப் போக்கினால் வேண்டுமென்று இழுத்தடிப்புச் செய்து வருகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை நாம் எமது தலைமைத்துவ வழிகாட்டலோடு முன்னேடுக்க இருக்கிறோம். இதுபோன்ற பல ஆர்ப்பாட்ட பேரணிகளை நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில் கறங்கோ காணி பிரச்சினைகள் தொடர்பிலும் நடாத்த திட்டமிட்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.











News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.