நாங்கள் மனிதர்கள். 

சமூகத்தைப் பலி கொடுத்த சாத்தானுக்கு 
எஹ்திகளோடு இன்பமாய் வாழ்வதற்கு 
இங்கிலாந்திலும் ஒரு பெரிய வீடு.
ஏந்திழையாள்களோடு இன்பம் அனுபவிக்க 
மலேசியாவிலும் மற்றொரு வீடு. 
கூலிக்கு மாரடித்து கோடிகளை கொள்ளையிட்டு 
சமூகத்தை படுகுழியில் 
சாகடித்த தலைவனுக்கு 
அறிவில்லா ஆடுகளின் இடையனுக்கு 
அல்லாஹ்வை மறந்து
ஆணவம் பேசுவதெல்லாம் 
அடுக்குமா உலகுக்கு?
இறுமாப்பில் பேசி ஏழைகளை ஏமாற்றி 
கொள்ளையடிக்கும் குபேரனே !
தலையாட்டும் அறிவில்லா செம்மறிகளுக்கு 
உன்விளையாடு எங்கே புரிய போகிறது?
பாவம்..
அறுவைக்கு உன்னிடம் வந்துள்ள 
அப்பாவி ஆடுகளை 
அறுத்துப் பலி் கொடுத்தால்
உன் ஹஜ்ஜி நிறைவேறுமா?
தலைவனே.. 
நீ ஒரு பேர் போன மந்திரவாதி.
உன் தந்திரத்தில் கட்டுண்டு 
தவிக்கின்ற ஆடுகளை 
உன் ஆசைக்கும் பூசைக்கு பறிகொடுத்து 
சாமி ஆடாதே ...
அறிவில்லா ஆடுகள் அரோகரா சத்தமிட்டு 
அலறித் துடிப்பது அவர்களின்
அறியாமையின் வெளிப்பாடா?
நாயுண்ட எச்சில் இலைகளை நக்கி 
இன்பம் காணும் அப்பாவி ஆடுகளுக்கு 
எப்பொழுது உலகம் புரியுமோ ?
பொய்யும் புரட்டும் புளுகுகளும்
வல்லவன் ஒருவனால்
வாழ்க்கையில் அழிந்தே தீரும். 
அகங்காரமும் ஆணவமும் 
அழிவதை அப்பாவி ஆடுகள்
கட்டாயம் பார்க்கத்தான் போகின்றன.
ஆட்டுக்களை ஏமாற்றும் இடையனே
உன்தந்திரத்தை அல்லாஹ் அறிவான் 
நாங்கள் பிரதேசவாதம் பேசும் 
பேயர்களுமல்ல
புரியாத புழுக்கைகளும் அல்ல.
 எஸ். முத்துமீரான்
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.