ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில், எதிர்வரும் 27ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்க நீதவான் மறுத்ததையடுத்து அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment