அமரத்துவமடைந்த சரவணமுத்து துவாரகனின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கிறிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டியில் துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக் கழகம் ஞாபகார்த்தக் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது
கடந்த நாட்களாக நடைபெற்றுவந்த கிறிக்கட் சுற்றுப்போட்டிக்கு அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 17 இற்கு மேற்பட்ட விளையாட்டுக்கழகங்கள் கலந்துகொண்டன
இதன் இறுதிப்போட்டி துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக்கழகத்திற்கும் பெரியநீலாவணை கோள்டன் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதில் முதலாவது வெற்றிக்கிண்ணத்தை மத்திய விளையாட்டுக்கழகமும் 2 ஆம் இடத்தினை கோள்டன் விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டது
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக துவாரகனின் தந்தை முன்னாள் கல்லாறு துறைநீலாவணை பலநோக்குக் கூட்டுறவின் முகாமையாளர் எஸ்;.சரவணமுத்து கிராமசேவை உத்தியோகத்தர் ரி.கோகுலராஜ் ஓய்வு பெற்ற நூலகர் கே.பாக்கியராசா ஊடகவியலாளரும் ஆசிரியருமான சா.நடனசபேசன் ஆகியோர் கலந்து கொண்டனா

Post a Comment