சொர்க்கத்தில் இடங்கிடைக்கப் பிரார்த்திப்போம்-
இது வரை உம்றா செய்யாத 55 வயதிற்கு மேற்பட்ட பள்ளிவாயல்களில் இமாம்களாகவும் , முஅத்தின்களாகவும் கடமையாற்றியவர்களுக்கான திட்டத்தை ஆரம்பித்து கடந்த மாதம் 100 பேரை அனுப்பி வைத்ததை நாம் அறிவோம். அந்த அடிப்படையில் 2வது கட்டமாக 100 இமாம்களும், முஅத்தின்களும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 25 ம் திகதிக்கிடையில் பயணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் பணித்துள்ளதாகவும் இதன்படி 2வது குழுவினர் இம்மாதம் 25ம் திகதி புறப்பட இருக்கிறார்கள் என்று சிறீலங்கா ஹிறா பௌண்டேஸனின் தலைவரும் கௌரவ இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் M.L.A.M. ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.
இன்ஷா அல்லாஹ் இந்த குழுவினர் கடந்த முறையைப் போன்று விஷேடமான முறையில் இம்முறையும் பல்வேறு இடங்களை தரிசிக்க இருப்பதோடு பல்வேறு பட்ட இமாம்களுடனும் கலந்துரையாட இருக்கிறார்கள். இது தொடர்பான சகல ஏற்பாடுகளையும் சிறீலங்கா ஹிறா பௌண்டேஸனின் செயலாளர் அல்ஹாஜ் A.L.M. மும்தாஸ் மதனி அவர்கள் சவூதி அரேபியாவில் இருந்து மேற்கொண்டு வருகிறார் என்று கௌரவ இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்

சார் நீங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரானால் என்ன?
ReplyDelete