உண்மைப்போராளிகள் வரிசையில் ஜவாத்தும் இடம்பெற்று விட்டார்-கிழக்கு மக்கள்!!
முஸ்லிம் காங்கிரஸ் மாநாடு அண்மையில் பாலமுனையில் இடம்பெற்றது.
அந்த வேளை ஹக்கீமுக்கு அருகில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கல்முனையைச் சேர்ந்த ஜவாத் அமர்ந்திருந்தார்.
மாநாட்டுக்கு வந்திருந்த ஜவாதை ஹக்கீம் ஏஏரெடுத்தும் பார்க்காததை உணர்ந்து கொண்ட ஜவாத், பஷீரைப் போன்று ஹக்கீமின் உரைக்கு முன்னரே வெளியேறிச் சென்று விட்டார்.
ஜவாத் ஹக்கீமுக்கு அருகில் அமர்ந்திருந்த வேளை ஹக்கீம் இன்னொருவரை அழைத்து காதுக்குள் ஏதோ முணுமுணுத்தார்.
அது இதுதான்
‘எனக்கு துரோகம் செய்த துரோகி எனக்கு அருகில் அமர்ந்திருக்கிறான். எனக்கு அருகில் அமர அவனுக்கு ஆசனம் வழங்கியது யார்? என சூடாக கேட்டாராம்.
ஹக்கீமுக்கு எதிரான சதி நடடிவடிக்கையில் கையொப்பமிட்ட 19 பேர்களில் ஜவாதும் ஒருவர் . கையொப்பமிட்ட 19 பேர்களில் அம்பாறை மாவட்டத்திலிருந்து கையொப்பமிட்டது இவர் மாத்தரமே.
உண்மையில் தன்மானமுள்ள மனிதானாக ஜவாத் செயற்பட்டிருக்கின்றார். தலைவன் என்பதற்காக அவரை நமது படுக்கையறையில் உரிமை கொண்டாட இடமளிக்க முடியாது. அவர் சொல்வது எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருக்க முடியாது. நமது கிழக்கு மண்ணின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்காகத்தான் உங்களை வாக்குப் போட்டு இந்த இடங்களுக்கு உங்களை அனுப்பி வைத்தோம். சகோதரர் ஹசன் அலி, தம்பி ஜவாத் போன்று ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் செயற்பட வேண்டும். உங்கள் எல்லோரது செயற்பாடுகளையும் நமது மக்கள் மிகக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

Post a Comment