இந்த வைத்தியசாலை அண்மையில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சராக இருந்த ஹசன் அலி அவர்களால் ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டதும், இக்கட்டிடம் சுனாமி வேலைத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் கட்டப்பட்டதும் மக்கள் அறிந்ததே.
ஆனால், தற்போது சுகாதார பிரதியமைச்சராக இருக்கின்ற சகோதரர் பைசால் காசீமுக்கு இந்த வைத்தியசாலை இருளில் மூழ்கிக் கிடப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? என மக்கள் அங்கலாய்க்pன்றனர்.
ஆனால் அரசின் பல கோடிகளைக் கொண்டு வந்து தனது காசுப் பேய்களான சகாக்களிடம் கொடுத்து கடலுக்குள்ளும் கட்டிடம் கட்டப்படுகிறது. அரைவாசிக்கு வேலையாம். பாதி அவர்களது பக்கட்டிலாம் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியாத விடயமல்லவே.
இந்த வைத்தியசாலையில் சிறுபிழையோடு காணப்படும் பாரிய அளவிலான ஜெனறேட்டர் இயந்திரமொன்றும், சிறிய அளவிலான ஜெனறேட்டர் இயந்திரம் ஒன்றுமாக எல்லாம் இரண்டு ஜெனறேட்டர்கள் இருந்தும் ஒரு பென்னாம் பெரிய சுகாதார பிரதியமைச்சர் இருந்தும் ஏன் இந்த வைத்தியசாலை இருளில் மூழ்க வேண்டும்? என ஏழை மக்கள்ஏக்கத்தோடு கேட்கின்றனர்.

இதற்கிடையில் இன்னுமொரு புதுக்கதை. வைத்தியசாiiயில் பழுதடைந்துள்ள ஜெனறேட்டர் திருத்துவதிலுள்ள சிரமத்தை அறிந்த அப்போதைய சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசனலி புதிய ஜெனறேட்டர் கொள்வனவிற்கு 80இலட்சங்கள் ஒதுக்கினாராம். ஜேனறேட்டரும் கொள்வனவு செய்யப்பட்டதாம். ஆனால் கல்முனை பிரதெச சுகாதார சேவைகள் பணிப்பாளரான அலாவுதீன் இன்னும் கொடுக்கிறார் இல்லையாம். அப்படின்னா....இந்த சுகாதார பிரதியமைச்சர் பைசால் என்னத்துக்கு நாக்கு வழிக்கிறத்துக்கா இருக்காரு என்டு எங்கட வோட்டு போட்ட சனமெல்லாம் கேட்கிறாங்க?
இதெல்லாம் என்னத்துக்கப்பா வைத்தியசாலையில் 14 இலட்சம் கணக்குப் போட்டு காசெடுத்து 05 இலட்சத்;துக்குத்தானாமே இன்டகோம் டெலிபோண் பூட்டினண்டு ஊரெல்லாம் பேசுறாங்க. மிச்சம் 09 இலட்சம் யார் பக்கட்டில வாப்பா? இதுல ஒரு இலட்சத்தக் கொடுத்து பழுதடைந்துள்ள பெரிய ஜெனறெட்டர திருத்தியெடுத்தா நிந்தவூரில பாதி ஊருக்கு கறண்டு கொடுக்கலாமே ராசா? ஏண்டா 24 மணிநேரமும் சுகமாகத் தூங்கிக் குரட்டைவிடும் இந்த மண்ணின் மைந்தணுக்கு புரியல்லியாடா? இல்ல கூடத்திரியிற குள்ளநரிக் கூட்டத்துக்கு விளங்கல்லியாடா? எல்லாக் கொதறத்தையும் மேல ஒருத்தன் பாத்துக்கிட்டிருக்காண்டா மக்காள். கடைசியில கடல் பேத்தட வயிறு ஊதுற மாதிரி ஊதிச் சாகிற தப்பாடா!
-உமர்க் காக்கா-






Post a Comment