அட்டாளைச்சேனையில் 389வது சதொச கிளை நிறுவனம் திறந்து வைப்பு.






  -அமைச்சர் றிசாட் பதியுதீன் பிரதம அதிதி-
                 
அட்டாளைச்சேனை மக்களின் முக்கிய தேவைகளில் ஒன்றாகக் காணப்பட்ட 'சதொச' நிறுவனத்தின் 389வது கிளை நிறுவனம் இன்று அட்டாளைச்சேனை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் கலாநிதி எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு 'சதொச' நிறுவனத்தைத் திறந்து வைத்ததோடு, வியாபாரத்தையும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான எஸ்.எஸ்.பி.மஜீட், முன்னாள் நீதிபதியும்,சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எல்.அப்துல் கபூர், சிரேஷ்ட அறிவிப்பாளரும், கல்விமானுமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் றிசாட் பதியுதீன் 'இந்த சதொச நிறுவனத்தின் மூலம் இப்பிரதேசத்தில் வாழும் சுமார் 35 ஆயிரம் மக்கள் நன்மையடையவுள்ளனர். இதனைத் திறந்து வைப்பதற்கு உதவிய அத்தனைபேருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.

இதேவேளை அக்கரைப்பற்றிற்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாட் பதியுதீன் அண்மைக் காலமாக நோய்வாய்ப் பட்டிருக்கும் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான மீரா.எஸ்.இஸ்ஸதீனையும் அவரது இல்லத்திற்குச் சென்று குசேலம் விசாரித்தார்.

.


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.