பிரியாமணி-முஸ்தாபா ராஜ் நிச்சயதார்த்தம்!- ஏப்ரல் 29


நடிகை பிரியாமணிக்கும், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவருக்கும் எதிர்வரு ஏப்ரல் 29ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடப்பெறவுள்ளது.

பாரதி ராஜாவின் கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியாமணி. பருத்தி வீரன் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்கும் நடிகை ஆனார். இந்த படத்தில் நடித்தற்காக தேசிய விருதும் பெற்றார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். சமீபகாலமாக தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு இல்லை.

நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம். இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வோம் என்று பிரியாமணி சமீபத்தில் அறிவித்தார். இப்போது, தனது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 29ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது என்று பிரியாமணி தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு கிரிக்கெட் போட்டியின் போது சந்தித்த மும்பை தொழில் அதிபருடன் பிரியாமணிக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துக் கொண்டனர். அந்த தொழில் அதிபரின் பெயர் முஸ்தபாராஜ்.

வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் பிரியாமணி – முஸ்தபாராஜ் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது. நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படுகிறது. திருமணத்துக்கு தயாராவதால் பிரியாமணி கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.