அரசாங்கம் ஐ.நாவிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – சம்பந்தன்




அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் திருத்தி அமைப்பதாகவும் உத்தரவாதம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த கால அரசாங்கங்கள் 1970களில் 1980களில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு விடுதலை வழங்கியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் அரசியல் ரீதியான காரணங்களின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அரசியல் கைதிகள் விவகாரத்தை வெறுமனே ஓர் சட்ட ரீதியான பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.