பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் மகன் மீது நேற்றிரவு இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பிரபல பாடசாலைகள் இரண்டிற்கிடையே நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த வேளை எஸ்.எஸ்.சீ. விளையாட்டு மைத்தானத்துக்கு அருகில் வைத்தே துலந்த சுமதிபால மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முக்கியஸ்தர் ஒருவரின் வாகனத்தில் வந்த ஒரு குழுவினரே இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment