மன்னர் சல்மானை கௌரவிப்பற்கு யெமன் மக்கள் தாயிஸில் அணிவகுப்பு.
யெமனில் ஹூதி மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டபூர்வ ஆட்சியை மீளக் கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சஊதி அரேபியா தலைமையிலான ஆஸிபதுல் ஹஸ்ம் எனும் அரபு கூட்டுப்படை நடவடிக்கைகளின் முதலவாது ஆண்டு பூர்த்தியை கௌரவிக்கும் முகமாக ஆயிரக்கணக்கான யெமன் மக்களின் பங்குபற்றுதலுடன் வெள்ளியன்று மாபெரும் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
அணிவகுப்பில் கலந்து கொண்டவர்கள் இரண்டு பள்ளிவாயல்களின் பணியாளர் மன்னர் சல்மான் மற்றும் அரபுகூட்டணி நாடுகளது தலைவர்களின் படங்களையும் ஏந்தி இருந்தனர்.
யெமன் சமூக உயர்பீட சபையின் தலைவர் மெஹ்தி ஹாதிம் அல்-நஹாரி கருத்து தெரிவிக்கையில், விரைவில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாக தோற்கடிப்பட்டு சரியான நிலைமைக்கு யெமன் திரும்பும் என தெரிவித்தார்.
அவர் சஊதி அரேபியாவின் செயற்பாடுகளை புகழ்ந்ததுடன், யெமனின் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளையும் சஊதி அரேபியா ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
யெமன் மற்றும் அதன் மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்த முதலாவது மனிதரான இரண்டு புனித பள்ளிவாயல்களின் பணியாளர் மன்னர் சல்மான் அவர்கள் சிறந்த தேகாரோக்கியத்துடனும் சந்தோசமாகவும் வாழ அல்-நஹாரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மற்றொரு யெமன் வாசியான நிஸாம் பின் அப்தாத் கருத்து தெரிவிக்கையில், உள்ளக மற்றும் வெளியக ரீதியாக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகள் சிறந்த முறையில் முறியடிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டதன் மூலம் யெமனின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை என்பன சஊதி அரேபியாவினால் மீளக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
யெமனின் பாதுகாப்பு மற்றம் ஸ்திர தன்மையை கொண்டுவர உதவி செய்த சஊதி அரேபிய மன்னர் சல்மான், மற்றும் ஆஸிபதுல் ஹஸ்ம் படைநடவடிக்கையில் இணைந்து செயற்பட்ட அரபு வளைகுடா நாடுகள் அனைத்திற்கும் நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்

Post a Comment