கட்சியின் முதுசம் ஹசனலியைத் தூக்கி வீச நீங்க யாருவாப்பா?!
– எஸ்.முத்துமீரான்-
எங்கள் சமூகத்தின் விடிவுக்காய்
தன்னுயிர் நீத்த தியாகி
அஷ்ரப் எனும் ஆளுமையுள்ள தலைவன்
நாட்டிய மரத்தின் நிழலிலிருந்து
கோடிக் கணக்கில் கொள்ளையடித்து
கும்மாளம் போடும் கோமாளிகளே..!
உண்மையாக உதிரம் சிந்திய
போராளிகளையும் பேராளிகளையும்
அடியோடு மறந்து காசிக்காய்
காக்காய் பிடிக்கும் காவலாளிகளையும்
கள்ளர்களையும் ஊழல் வாதிகளையும்
நீங்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுவதேன்?
பாவம்.! உங்கள் வரலாறும், புலுடாக்களும்
எங்களுக்குத் தெரியாதா?
ஆற்றங்கரையிலிருந்து அஷ்ரப் வீசிய
மீன்களின் செதில்களை கோருத்த
நீங்களெல்லாம் எப்படித் தலைவரானீர்கள் ?
வரலாறு தெரியாமல் வாய்ப் பேச்சில்
மேடைகளில் வீணி வடிக்கும் நீங்கள்
எங்கள் சமுதாய விடிவுக்கு என்ன செய்தீர்கள்?
கோடிக் கணக்கில் ஊழல் செய்து
கொடிஸ்வரராகி உங்களை வளர்த்ததை தவிர
நீங்கள் என்ன வாப்பா செஞ்சீங்க ?.
தன்மானம் இல்லாமல் தம்பட்டமடிக்கும்
தலையில்லாத் தலைமைகளே.!
எங்கள் ஆளுமையுள்ள போராளி ஹசனலியை
கட்சியிலிருந்து தூக்கி எறிய
நீங்கள் எப்ப வாப்பா கட்சிக்குள் வந்த?
உங்களால் முடியுமா இதைச் செய்ய ?


Post a Comment