பார்சிலோனா மெஸ்சியின் அதிரடி தொடர்கிறது!



ஸ்பெய்ன் லீகா போட்டியில், பார்சிலோனா குழு 4-0 என்ற கோல்கணக்கில் எஸ்.டி.எய்பார் குழுவை வென்றது. இந்த ஆட்டத்தில் லியோனல் மெஸ்சி மீண்டும் இரண்டு கோல்களை அடித்து குழுவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

லீகா புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா தனக்கு அடுத்த நிலையிலுள்ள குழுவைக் காட்டிலும் 11 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணி வகித்து வருகிறது. ஆட்டம் தொடங்கிய 8ஆவது நிமிடத்தில் எல் ஹாடாட்டி முதல் கோலைப் போட்டார்.

அடுத்து 41ஆவது நிமிடத்தில் மெஸ்சி கோலடித்தார். 76ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை மெஸ்சி மீண்டும் கோலாக்கினார். 84ஆவது நிமிடத்தில் லுய்ஸ் சுவரெஸ் தமது குழுவின் 4ஆவது கோலைப் போட்டார்.

பார்சிலோனாவுக்கு போட்டி கொடுத்து வரும் அத்லெட்டிக்கோ மாட்ரிட் குழு 3-1 என்ற கோல் கணக்கில் வாலென்சியாவை வீழ்த்தியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.