குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல் எனது இராஜினாமாவுக்கான காரணங்களை பல்வேறு விதமாக சில ஊடகங்கள் தான் கூறியதுபோன்று தான்தோன்றித் தனமாக செய்திகளை வெளியிடுவது ஊடக சுதந்திரத்திற்கு ஆரோக்கியமான விடயமன்று என கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நான் நேற்று முன் தினம் (14/03/2016) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகர் பாவியிலிருந்தும் இராஜினாமாச் செய்தேன். குறித்த இராஜினாமாவுக்கான காரணம் எனக்கும் ஜெமீலுக்கும் இடையிலான முரன்பாடாகும். நான் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கும் காலம் முதல் ஜெமீல் எனக்கு எதிராக செயற்பட்டுவருவது எல்லோரும் அறிந்த விடயமாகும்.
நான் கல்முனை மாநகர முதல்வராக இருந்தகாலத்தில் என்னை முதல்வர் பதவியிலிருந்து நீங்க்குவதற்கு ஜெமீல் பல்வேறு முயறச்சிகளை மேற்கொண்டார் அத்தோடு என்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார், குறிப்பிட்டுக் கூறுவதானால் சாய்ந்தமருது பீச் பாக் மற்றும் மீனவர் வாசிகசாலை போன்ற அபிவிருத்திகளை தடுக்க முட்பட்டதை குறிப்பிடலாம். மேற்கூறியவை யாவும் யாவரும் அறிந்த விடயமாக இருந்தாலும் அவற்றை இவ்விடத்தில் ஞபகப்படுத்துவது சாலப் பொருத்தமாக அமையும் எனக் கருதுகின்றேன்.
றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நாம் இணைந்தபோது எதிரும் புதிருமாக இருந்த எங்களை ஒருமித்து செயற்படுமாறு றிசாத் பதியுதீன் அவர்கள் பணித்தார். நானும் இதய சுத்தியுடன் ஒருமித்து செயற்படுவதற்கு இணங்கி செயற்பட்டேன். ஆனால் ஜெமீலின் குள்ளத்தனமும் முனாபிக் தனமானமும் மிக்க செயற்பாடு தொடர்ந்த வண்ணமே இருந்தது.
கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நான் போட்டியிட்டபோது என்னைத் தோக்கடிக்க வேண்டும் என்பதற்காக ஜெமீல் கட்சிக்கு எதிராக செயற்பட்டார். அதற்கு ஆதாரமாக குறித்த தேர்தலின் இருதிக்காலப்பகுதியில் கட்சிக்காக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபடாது அவர் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்ததை குறிப்பிடலாம்.
பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு கட்சியில் இணைந்து விட்டு கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்காமல் அவரது பொருளாதார வளர்ச்சியினை மட்டும் கருத்தில் கொண்டு செயட்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவது போன்று பாசாங்கு செய்து கொண்டிருக்கின்றார். இவ்வாறான நயவஞ்சகர்களுக்கு முன்னுரிமை வழங்குமிடத்தில் கை கட்டி மௌனிகளாக இருக்க முடியாது. இது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களிடம் தெரிவித்தும் பலன் கிட்டவில்லை. இதுவே எனது இராஜினாமாவுக்கான காரணமாகும். இதைவிடுத்து ஊடக தர்மத்தை மறந்து தான்தோன்றித் தனமாக வெளிவரும் செய்திகளுக்கு தான் பொறுப்பில்லை எனத் தெரிவித்தார்.
நகரிகமான முறையில் அரசியல் செய்பவன் என்றவகையில் எனது இராஜினமாக்கள் எந்தவித நிர்பந்தங்களுமின்றி நடைபெற்றிருக்கின்றன. அத்தோடு கட்சி தலைவர்களின் விசுவாசத்துக்கு அமைவாக நான் எப்போதும் செயற்பட்டிருக்கின்றேன். அந்தவகையில் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு விசுவாசமாகவும் நன்றியுடையவனாவும் செயற்பட்டேன். அதுமாத்திரமன்றி யாருக்கும் சேறு பூசுவது எனது நோக்கமல்ல. ஆனால் சில ஊடகங்கள் நான் தெரிவிக்காத விடயங்களை கூறி றிசாத் பதியுதீன் அவர்களுக்கு சேறுபூச விளைகின்றனர். அவர்கள் இறைவனை பயந்து கொள்ளட்டும் என சிராஸ் மீராசாஹிப் குறிப்பிட்டார்.
(அகமட் எஸ். முகைடீன்)

Post a Comment