முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டைப் பகிஷ்கரித்த கட்சியின் செயாலாளர் நாயகம் ஹஸனலி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் விமர்சித்ததாக கூறி மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்களையும் தலைவரின் தன்னிச்சை முடிவால் இடைநிறுத்தப் பட்டத்தை அடுத்து மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் 2 டாக பிளவு பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருக்கும் குத்துவெட்டுக்களை துணிச்சலுடன், முதுகெழும்பு உள்ள தலைவராக இருந்து விமர்சிக்கின்ற தலைவர்களில் ஒருவராக மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் எதிர் பார்க்கப்படுகின்றது.
கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து நாட்டில் நாலா பகுதிகளிலுமுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கூலிக்கு அமர்த்தி மாநாட்டுப் பிரதேசத்தை மு கா தலைமை நிரப்பியுள்ள போதும் ஜனாதிபதியும் பிரதமரும் அந்த மாநாட்டு மேடையை அலங்கரித்த போதும் அக்கட்சியின் செயலாளர் நாயகம் கலந்து கொள்ளாமை ஹக்கீமுக்குக் கிடைத்த பலத்த அடியென்று தெரிவிக்கப் படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் அதிர் உயர் பீடத்தில் 90 உ றுப்பினர்கள் இருக்கின்ற நிலையில் மு.கா. தலைவர் நினைத்த படி யாரையும் இடைநிறுத்த முடியாது.
90 வீதமான முஸ்லிம் காங்கிரஸ் அதிர் உயர் பீடத்தில் உ றுப்பினர்களில் 54பேர் மு.கா.கட்சியின் செயாலாளர் நாயகம் ஹஸனலி மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பக்கம் இருப்பதாகவும் சற்று முன் கிடைத்த தகவலின்படி தெரியவந்துள்ளது.
இறைவன் தேடிக்கொடுத்த பதவியாக இருந்தால் ஒவ்வொரு வருடமும் இவ்வாறன பிரச்சினைகள் வராது. தன் நபிசி கேட்கிறது தாருங்கள் என்று அடித்து பறித்தெடுத்த தலைமைப்பதவியில் இப்படித்தான் நடக்கும்.
விட்டுக்கொடுக்க மனம் வராது.பயத்தின் காரணமாக பதவியை தக்க வைத்துக்கொள்ள மாற்றங்கள் செய்யப் போய் பிரச்சினைகளை வாங்கிக் கட்டிக் கொண்ட ஹக்கீமுக்கு விடிவுக்கலாம் வராதா?


Post a Comment