ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகிறது ..!



குப்பி’, ‘வனயுத்தம்’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ், இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஒரு மெல்லிய கோடு’. இதில் அர்ஜூன், ஷாம், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜாவின் 1001வது படமாக வெளியாக உள்ள இப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகிறது.

கடந்த வாரம் கன்னடத்தில், ‘கேம்’ என்ற தலைப்பில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எப்போதும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து படம் இயக்கும் ஏ.எம்.ஆர்.ரமேஷ், இந்த படத்தை முன்னாள் அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்தை மையமாக வைத்து எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்துள்ள இயக்குநர் ரமேஷ், “ நான் இயக்கிய அனைத்து படங்களுமே நிஜ சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கினேன். இந்த படதின் கதை நிஜ சம்பவமா இல்லையா என்பதை படம் பார்க்கும் போது அறிவீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை படு வேகமான திரைக்கதை இருக்கும். ஆக்ஷன் திரில்லர் கலந்து படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இசைஞானி இளையராஜாவின் 1001 வது படம் இது. அவரது பின்னணி இசை படத்தின் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம். அவரது இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது” என்றார்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யாமல், கன்னடத்தில் ஏன் முதலில் ரிலீஸ் செய்தீர்கள்? என்றதற்கு, “கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் எடுத்த இப்படத்தை ஒரே சமயத்தில் தான் ரிலீஸ் செய்ய விரும்பினேன். ஆனால், ‘கேம்’ என்ற பெயரில் கன்னட படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது. ‘ஒரு மெல்லிய கோடு’ என்ற பெயரில் தமிழில் எடுத்தப் படத்திற்கு சென்சார் வழங்கவில்லை. படத்தில் ஏகப்பட்ட காட்சிகளை வெட்ட சொன்னார்கள்.

கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளாக இருப்பதால், நான் காட்சிகள் மீது கை வைக்க கூடாது என்பதி தெளிவாக இருந்ததால், ரிவைசிங் கமிட்டிக்கு எடுத்துச் சென்றேன். அங்கும் என் படத்தை பார்க்காமல் என்னை அலகழித்தார்கள். இதற்கிடையில் கன்னட பதிப்புக்கு, எந்தவிதமான கட் இல்லாமல் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இருந்தாலும் மனம் தளராமல் ரிவைசிங் கமிட்டிக்காக காத்திருந்தேன். அதற்போது ரிவைசிங் கமிட்டி மூலம் யு/’ஏ சான்றிதழ் பெற்றுள்ளேன். அதனால் தான் தமிழில் சற்று தாமதமாக ரிலீஸ் செய்ய வேண்டியதாயிற்று” என்றார்.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் இளையராஜா கலந்துக்கொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.